தொடரும் தடுப்பூசி தட்டுப்பாடு : 7 மருத்துவமனைகளில் பணிகள் நிறுத்தப்பட்டதால் மக்கள் அவதி!!

Author: Udayachandran RadhaKrishnan
24 June 2021, 1:23 pm
vaccine stop- Updatenews360
Quick Share

மதுரை : தொடரும் தடுப்பூசி தட்டுப்பாட்டால் 7 அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

மதுரையில் தடுப்பூசி தட்டுப்பாட்டால் உசிலம்பட்டி, மேலூர், திருமங்கலம், வாடிப்பட்டி ஆகிய 7 அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளது/

மதுரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மட்டுமே தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இன்றைய தினத்தில் 4,730 தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் உள்ளன.

கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளை கொண்டு தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெறுகிறது, மதுரை மாவட்டத்தில் இதுவரை 5,03,500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளன

Views: - 260

0

0