ஆக. 1., பெட்ரோல் விலை உயர்வா? குறைவா?: இன்றைய நிலவரம்..!!

Author: Aarthi Sivakumar
1 August 2021, 8:03 am
Petrol - Updatenews360
Quick Share

சென்னை: சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 102.49 ரூபாய், டீசல் லிட்டருக்கு 94.39 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினசரி அடிப்படையில் நிர்ணையித்து வருகின்றன.

கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. இதனால், இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. பல மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்து விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயைக் கடந்தும் தொடர்ந்து விலையேற்றத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் 16வது நாளாக விலைமாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.49க்கும், டீசல் ரூ.94.39க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Views: - 156

0

0