ஊதிய உயர்வு கோரி ஒப்பந்த நிறுவனங்கள் வேலை நிறுத்தம் : 1.50 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழப்பு.. ரூ.5கோடி உற்பத்தி பாதிப்பு

Author: Udayaraman
28 July 2021, 4:11 pm
Tirupur Strike - Updatenews360
Quick Share

திருப்பூர் : கூலி உயர்வு கோரி (பவர் டேபிள்) பனியன் தைத்து தரும் ஒப்பந்த நிறுவனங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் 1லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளனர். நாள் ஒன்றுக்கு 5 கோடி ரூபாய் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.

திருப்பூரில் உள்ள பெரிய பனியன் நிறுவனங்களிடம் ஒப்பந்த அடிப்படையில் பின்னலாடைகள் தைத்து தரும் சிறிய நிறுவனங்களுக்கு கூலி உயர்வு தரக்கோரி இன்று முதல் பவர்டேபிள் உரிமையாளர்கள் கால்வரையற்ற வேலை நிறுத்தத்தை துவக்கி உள்ளனர்.

4 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தம் கடந்த 2020 அக்டோபர் மாதம் காலாவதியான நிலையில் அதனை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து 2000க்கும் மேற்பட்ட சிறிய நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தை துவக்கி உள்ளனர்.
இதனால் இந்த நிறுவனங்களில் பணியாற்றி வரும் 1 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மேலும் நாள் ஒன்றுக்கு 5 கோடி ரூபாய் வரையிலான பனியன் துணிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கமான சைமா மூலம் பேச்சு வார்த்தை நடத்தி கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்படும் நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஒப்பந்த பேச்சுவார்த்தை நடைபெற வில்லை என கூறப்பட்டாலும் அடுத்து தீபாவளி நெருங்கி வருவதால் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குவது மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் 20 சதவீத கூலி உயர்வை இடைக்காலமாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பவர்டேபிள் உரிமையாளர்கள் சங்கம் இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

Views: - 286

0

0