ஒரு வேளை அப்படி இருக்குமோ? மாறன் பட போஸ்டரால் சர்ச்சை.. தனுசை வசைபாடும் ரசிகர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 February 2022, 1:49 pm
Maran Malavika - Updatenews360
Quick Share

தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் சேர வேண்டும் என குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

அதே போல தோளுக்கு மேல் வளர்ந்த மகன்கள் உள்ள நிலையில் இந்த முடிவை கைவிட வேண்டும் என ரஜினி ரசிகர்கள், தனுஷ் ரசிகர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஒரு பக்கம் இருவரும் மீண்டும் இணைவார்கள் என செய்தி வந்த வண்ணம் உள்ள நிலையில், தனுஷ் நடித்து வரும் மாறன் போஸ்டரை இன்று காதலர் தினத்தை முன்னிட்டு மாளவிகா மோகனன் வெளியிட்டுள்ளார்.

இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், இருவரையும் இணைத்து பேசி வருகின்றனர். ஒரு வேளை அப்படி இருக்குமோ என ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்த விமர்சனங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Views: - 510

0

0