தனியார் மில்லில் பெண் தாக்கப்பட்ட சர்ச்சை வீடியோ விவகாரம் : நடவடிக்கை எடுக்க கோரி சி.ஐ.டி.யூ கண்டன ஆர்ப்பாட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
6 December 2021, 3:25 pm
Woman Attack Protest -Updatenews360
Quick Share

கோவை : கோவையில் தனியார் மில் ஒன்றில் பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து சி.ஐ.டி.யு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை சரவணம்பட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் நூற்பாலையில் தமிழகம் மற்றும் வட மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் பெண் ஒருவர் மீது தாக்குதல் நடத்துவது போன்றும், அவர் கதறி அழுவது போன்றும் ஒரு வீடியோ வெளியானது. இது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக சரவணம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இதனை கண்டித்து கோவை மாவட்ட மில் தொழிலாளர் சங்கம் சார்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள 300க்கும் மேற்பட்ட பஞ்சாலைகளில் சிறப்புக்குழு அமைத்து பெண்களின் பாதுகாப்பையும் சட்டப்படியான உரிமைகளை பாதுகாத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர்கள் மனோகரன், ரபிக் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Views: - 123

1

0