என்னோட செக்யூரிட்டியா இருந்தவரு… இப்ப டிஎஸ்பி : அவரு நினைச்சா யார வேணாலும் குற்றவாளி ஆக்கமுடியும்.. அமைச்சர் பேச்சால் சர்ச்சை!!(வீடியோ)

Author: Udayachandran RadhaKrishnan
24 August 2022, 5:00 pm
Minister Nehru - Updatenews360
Quick Share

ஜீயபுரம் டிஎஸ்பி நினைத்தால் ஒருவரை குற்றவாளியாக்க முடியும் என அமைச்சர் கேஎன் நேரு கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அமைச்சர் கேஎன் நேரு பேசும் போது, அங்கு அமர்ந்திருந்த திருச்சி மாவட்டம் ஜீயபுரம் டிஎஸ்பி பரவாசுதேவனை நோக்கி, தனக்கு செக்யூரிட்டயாக எஸ்ஐ ஆக இருந்த அவர், பல்வேறு பணி நிலைகளை கடந்து டிஎஸ்பியாக உயர்ந்துள்ளார்.

அவர் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் குற்றவாளி ஆக்கலாம், குற்றவாளியில் இல்லை என்று மாற்றவும் முடியும் என அமைச்சர் பேசினார்.

அவரது இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Views: - 200

0

0