பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு : திருநங்கைகள் உட்பட 3 பேர் கைது!!

22 October 2020, 3:42 pm
Murder Arrrest - Updatenews360
Quick Share

கோவை : பணம் கொடுக்கல் வாங்கல் தகராறை தடுக்கச் சென்ற இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த திருநங்கைகள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை தொட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன். 27 வயதான இவர் ஒர்க்‌ஷாப் ஒன்றில் பணியாற்றி வருவதோடு, இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்துள்ளார்.

இவரிடம் மைக்கேல் என்பவர் தனது ஆட்டோவின் ஆவணங்களை கொடுத்து 38 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் பத்தாயிரம் ரூபாய் பணத்தை மைக்கல் திருப்பி செலுத்தி உள்ளார்.

இந்நிலையில் இளங்கோவனின் தாய் பாக்கியலட்சுமி மைக்கேலை தொடர்பு கொண்டு 10 ஆயிரம் ரூபாய் பணத்திற்கு பதிலாக 9 ஆயிரம் ரூபாய் தான் உள்ளது எனவும் ஆயிரம் ரூபாய் குறைவாக கொடுத்து உள்ளதாக கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த மைக்கேல் இளங்கோவனின் தாயாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து ஆட்டோவில் ஆயுதங்களுடன் வந்த மைக்கல் தனது நண்பர்களான திருநங்கைகள் ராகிணி மற்றும் வெண்பா ஆகியோருடன் வந்து இளங்கோவனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது ராகிணி கட்டையால் இளங்கோவின் தலையில் அடித்துள்ளார். இதனைப் பார்த்து அங்கு நின்று கொண்டிருந்த செளந்தர், அருண், கிருபாகரன் ஆகியோர் தடுக்கச் சென்ற போது, மைக்கல் செளந்தரின் நெஞ்சில் கத்தியால் குத்தியுள்ளார்.

இதையடுத்து செளந்தரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்ற நிலையில் உயிரிழந்தார். இதில் காயமடைந்த இளங்கோவன்,கிருபாகரன்,அருண் ஆகிய மூவரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டனர்.

உயிரிழந்த சவுந்தர்

இது குறித்து வழக்குப் பதிவு செய்து பீளமேடு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மைக்கல் (வயது 24), ராகிணி (வயது 32), வெண்பா (வயது 23) ஆகியோரை பீளமேடு காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 22

0

0