ஒலிம்பிக் ஹாக்கி அணி பகுத்தாய்வாளராக தேர்வான சுமை தூக்கும் தொழிலாளியின் மகன்

20 July 2021, 7:58 pm
Quick Share

நீலகிரி: குன்னூரில் சுமை தூக்கும் தொழிலாளியின் மகன் இந்திய ஒலிம்பிக் போட்டியில் காணொளி பகுத்தாய்வாளராக தேர்வானது மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள காந்திபுரம் பகுதியை சேர்ந்த தேயிலை தொழிற்சாலையில் சுமை தூக்கும் தொழிலாளி சின்னசாமி – ராஜலட்சுமி தம்பதியரின் மகன் 30 வயது இளைஞன் அசோக் குமார். இவர் “ஹாக்கி நீலகிரிஸ்” என்னும் விளையாட்டு அணியில் பங்கேற்று, மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் தேர்வாகினார். இந்த நிலையில் டோக்கியாவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களுடன் வீடியோ அனலிஸ்ட் அதாவது காணொளி பகுத்தாய்வாளராக தேர்வாகி போட்டியில் கலந்துகொள்ள உள்ளார். நடுத்தர குடும்பத்தை சார்ந்த அசோக்குமார் இந்திய அளவிலான ஒலிம்பிக் போட்டியில் தேர்வானது அப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல் நீலகிரி ஹாக்கி விளையாட்டு வீரர்களும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 80

0

0