கொரோனாவுக்கு முன்னாள் எம்.எல்.ஏ பலி : கோவையில் சோகம்!!
13 September 2020, 11:42 amகோவை : கொரோனா தொற்றால் பாதிப்பட்ட முன்னாள் எம்எல்ஏ தங்கவேல் சிகிச்சை பலனின்றி பலியானார்.
கோவை மாவட்டத்தின் செயலாளராக 11 ஆண்டுகள் பணியாற்றி வந்தவர் முன்னாள் எம்எல்ஏ தங்கவேல். இவர் திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான தங்கவேல் கொரோனா காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த அவர், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது இறுதிச்சடங்குகள் திருப்பூரில் நடைபெற உள்ளது. அவரது குடும்ப உறுப்பினர்கள் மட்டும் இறுதிச்சடங்கில் பங்கேற்கின்றனர்.
சமீபத்தில் முன்னாள் எம்எல்ஏ தங்கவேல் மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் குணமாகி வீடு திரும்பியது நினைவுகூரத்தக்கது.
0
0