கோவையில் 387 பேருக்கு கொரோனா பாதிப்பு : இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது..!

24 August 2020, 7:54 pm
Quick Share

கோவை: கோவையில் இன்று 387 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செயப்பட்டதை தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்துள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில் சிறப்பு காய்ச்சல் வார்டில் பணியாற்றி வருபர்களுக்கு அண்மை காலமாக கொரோனா நோய்த் தொற்று பரவி வரும் நிலையில் இன்று 31 வயது ஆண் மருத்துவர், 48 வயது தலைமை செவிலியர், 3 செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவிகள் என்று 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தவிர மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையை சேர்ந்த 51 வயது ஆண் மருந்தாளுநர், சூலூர் விமானப்படையை சேர்ந்த 35 வயது வீரர், தமிழ்நாடு ஓட்டலை சேர்ந்த 48 வயது ஆண் அலுவலர், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தை சேர்ந்த 30 வயது பெண் காவலர், கோவை மத்திய சிறையை சேர்ந்த 53 வயது ஆண் ஆகியோருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர மேட்டுப்பாளையத்தில் 15 பேர், துடியலூர், ராம் நகர், பீளமேட்டில் தலா 12 பேர், காந்திபுரம், குனியமுத்தூர், பி.என்.பாளையத்தில் தலா 10 பேர், கணபதியில் 9 பேர், பொள்ளாச்சியில் 8 பேர் உள்பட 387 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 141 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 75, 70, 66 வயது மூதாட்டிகள், 51, 53 வயது ஆண்கள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 75 வயது முதியவர், 50 வயது ஆண் என்று 7 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கோவையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 244 ஆக உயர்ந்துள்ளது.

Views: - 25

0

0