கோவையில் 2 சிறை கைதிகள் உட்பட 24 பேருக்கு கொரோனா உறுதி..!

29 June 2020, 8:57 pm
Cbe ESI - Updatenews360
Quick Share

கோவை: சென்னை புழல் சிறையில் இருந்து கோவை சிறைக்கு வந்த இரண்டு கைதிகள் உள்பட 24 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மத்திய சிறையில் இருந்து பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு எழுதவதற்காக 23 விசாரணைக் கைதிகள் சென்னை புழல் சிறைக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிந்த மறுநாளே கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் 23 பேரும் ஜூன் 25 ஆம் தேதி கோவை மத்திய சிறைக்கு திரும்ப அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சிறை வளாகத்திலே தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இவர்களில் 42, 38 வயதுள்ள இரண்டு பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இன்ற்ய் உறுதி செய்யப்பட்டுள்ளது. அண்ணா மார்க்கெட்டில் வியாபாரம் செய்து வந்த 48 வயது ஆண் வியாபாரிக்கும், அண்ணா மார்கெட் சென்று வந்த கே.கே.புதூரை சேர்ந்த 18 வயது ஆண், இவரின் குடும்பத்தை சேர்ந்த 43 வயது பேண் மற்றும் 41 வயது ஆண் ஆகிய 4 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புடையவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வெள்ளக்கிணர் பிரிவை சேர்ந்த 22, 21 வயது ஆண்கள்,

குனியமுத்தூர் ஆர்.கே.வி.பள்ளி வீதியை சேர்ந்த 74 வயது மூதாட்டி, 23 வயது பெண், 21 வயது ஆண் ஆகிய 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கருமத்தம்பட்டி சோதனைச்சாவடியில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 45 வயது ஆண் ஒருவருக்கும் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வந்தவர்களில் சின்னியம்பாளையம் ஆசிரியர் காலனியை சேர்ந்த 46 வயது பெண், ஒண்டிப்புதூர் காமாட்சிப்புரத்தை சேர்ந்த 39 வயது பெண், நீலம்பூர் சக்தி நகரை சேர்ந்த 38 வயது ஆண், ஆர்.எஸ்.புரம், விவிசி லே அவுட்டை சேர்ந்த 37 வயது ஆண், டவுன்ஹால் நாடார் வீதியை சேர்ந்த 65 வயது முதியவர்,

செட்டி வீதியை சேர்ந்த 50 வயது ஆண், பாப்பநாயக்கன்பாளையம் அம்மன்குளம் சாலையை சேர்ந்த 45 வயது பெண், கவுண்டம்பாளையம் அண்ணாநகரை சேர்ந்த 43 வயது பெண், வெற்றிநகரை சேர்ந்த 50 வயது ஆண், ராஜன் நகரை சேர்ந்த 70 வயது முதியவர், பிள்ளையார்புரத்தை சேர்ந்த 25 வயது ஆண், 24.வீரபாண்டி அபிராமி நகரை சேர்ந்த 41 வயது ஆண் ஆகிய 12 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று மட்டும் 17 ஆண்கள், 7 பெண்கள் சேர்த்து 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கோவையில் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 528 ஆக உயர்ந்துள்ளது.