தமிழகத்தில் 18 ஆயிரத்தை நெருங்கியது கொரோனா பாதிப்பு : ஆயிரத்தை நெருங்கிய கோவை…. 500-ஐ எட்டிய மதுரை

Author: kavin kumar
12 January 2022, 9:16 pm
Corona Status - Updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் மேலும் 17,394 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 28,47,589 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 17,934 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் மொத்த பாதிப்பு 28,47,589 ஆக அதிகரித்துள்ளது. அதனால், கொரோனா பாதித்து சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 88,959 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு குணமடைந்து இன்று மட்டும் 4,039 பேர் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதித்து இன்று மட்டும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இன்று மட்டும் சென்னையில் 7,372 பேருக்கும், செங்கல்பட்டில் 1,840 பேருக்கும், கோயம்புத்தூரில் 981 பேருக்கும், திருவள்ளூரில் 931 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Views: - 317

0

0