திருப்பூரில் இன்று பாதிப்பு இத்தனையா… ஒரே நாளில் புதிய உச்சம் : மாவட்ட வாரியான கொரோனா நிலவரம்..!

12 September 2020, 6:48 pm
coimbatore_airport_corona_updatenews360
Quick Share

சென்னை : தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஏறி, இறங்கி வரும் நிலையில், மாவட்ட வாரியான பாதிப்பு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. வந்தது. இன்று 5,495 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,97,066 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் சென்னையில் 978 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, கோவையில் 428 பேருக்கும், திருவள்ளூரில் 299 பேருக்கும், சேலத்தில் 289 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத அளவில் திருப்பூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 256 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியான பாதிப்பு விபரத்தை தற்போது காணலாம்..!

Views: - 4

0

0