கொரோனா எதிரொலி : வேளாண் பல்கலை., பட்டமளிப்பு விழாவுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு!!

14 June 2021, 9:35 am
TNAU -Updatenews360
Quick Share

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 42 ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டங்கள் பெறுவதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 42 ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டங்களைப் பெறுவதற்கு 31.3.21 வரையிலான தோ்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் ஜூன் 11 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கொரோனா பொதுமுடக்கம், கட்டுப்பாடுகள் காரணமாக விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூலை 9 ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்களை பல்கலைக்கழக இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து ஆன்லைன் மூலமாகவும், தபால் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

உரிய விண்ணப்பக் கட்டணம் செலுத்தி, சான்றிதழ்களின் நகல்கள், புகைப்படங்கள் இணைக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் ஜூலை 9 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் எனவும் இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 0422 6611506 எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றும் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Views: - 142

0

0