ஒரே பகுதியில் 37 பேருக்கு கொரோனா! சத்தியமங்கலம் அருகே பீதி!!

22 August 2020, 2:12 pm
Sathy Corona Fear- Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம், தாளவாடியில் வேகமாக பரவும் கொரானாவால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். மருத்துவர், செவிலியர்களுக்கும் தொற்று ஏற்பட்டதால் நூற்றுக்கணக்கானவர்களுக்கு பரிசோதனை நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி தாளவாடி மலைப்பகுதியில் வேகமாக பரவிவரும் கொரானா தொற்றால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். இன்று ஒரேநாளில் சத்தியமங்கலத்தில் 20 நபர்களுக்கும், தாளவாடி மலைப்பகுதியில் 17 நபர்களுக்கும் தொற்று ஏற்பட்டதால், இவர்களது தொடர்பில் இருந்த இருநூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு இன்று பரிசோதனை நடைபெற்று வருகிறது.

சத்தியமங்கலம் நகராட்சி ரங்கசமுத்திரத்தில் உள்ள கோழிக்கடை உரிமையாளர் ஒருவருக்கு ஏற்பட்ட தொற்றால் இவரது மூலம் அதே வீதியில் 20 நபர்களுக்கு தொற்று ஏற்பட்டது. இவர்கள் அனைவரும் இன்று கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதனால் அந்த வீதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கு இன்று கொரானா பரிசோதனை நடைபெற்று வருகிறது. அதே போல் தாளவாடி மலைப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவருக்கு நேற்று கொரானா ஏற்பட்டது.

இதனால் அவர் தொடர்புடைய 50 பேருக்கு பரிசோதனை நடத்தியதில் மேலும் ஒரு தனியார் மருத்துவர் மூன்று செவிலியர்கள் உள்ளிட்ட 17 நபர்களுக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான பொதுமக்களுக்கு பரிசோதனை நடைபெற்று வருகிறது. சத்தியமங்கலம், தாளவாடி பகுதியில் கொரானா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டியுள்ளதால், பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர்.

Views: - 23

0

0