இது வேறயா.. விளங்கிரும்.. .ரேஷன் கடையில் கொரோனா நிதி ரூ.7.36 லட்சம் கொள்ளை!!

17 May 2021, 2:06 pm
Ration Amount Theft- Updatenews360
Quick Share

சென்னை சைதாப்பேட்டை காவேரி நகர் ரேஷன் கடையில் ரூ.7.36 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா நிவிரண நிதியாக முதல் தவணை நிதியாக ரூ.2 ஆயிரம் தமிழக அரசால் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அதன் படி கடந்த 15ஆம் தேதியில் இருந்து பொதுமக்களுக்கு நிதி வழங்கப்பட்டு வரகிறது. இதற்காக அந்தந்த ரேஷன் கடைகளில் இருந்து தினமும் 100 பேருக்கு நிதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை சைதாப்பேட்டை காவேரி நகர் ரேஷன் கடையில் வைக்கப்பட்டிருந்த ரூ.7.36 லட்சம் பணம் கொள்ளை போனதாக ரேஷன்கடை மேற்பார்வையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். ஏற்கனவே தமிழக அரசு நிதி சுமையில் உள்ள நிலையில், மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகை கொள்ளை போனது அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 196

0

0