தமிழகத்தில் 744 பேருக்கு கொரோனா உறுதி:கோவையில் பலி எண்ணிக்கை உயர்வு

Author: Udhayakumar Raman
24 November 2021, 10:11 pm
Malaysia Corona - Updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 744 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 744 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 22 ஆயிரத்து 506 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 484 ஆக அதிகரித்துள்ளது. இன்று 14 பேர் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36ஆயிரத்து 415 ஆக அதிகரித்துள்ளது. இன்று 782 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26 லட்சத்து 77 ஆயிரத்து 607 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 114ஆக இருந்த நிலையில் இன்று 115ஆக அதிகரித்துள்ளது.கோவையில் 119 ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 117 ஆக குறைந்தது. மேலும் கோவையில் ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக, 2455 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Views: - 189

0

0