கொரோனா அதிகரிப்பு : அமைச்சரவை செயலர் திடீர் ஆலோசனை!!

27 February 2021, 6:15 pm
Corona Meeting -Updatenews360
Quick Share

நாடு முழுவதும் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுடன் அமைச்சரவை செயலாளர் ஆலோசனை நடத்தினார்.

கடந்த ஆண்டு கொரோனா எனும் கோவிட் நோயால் உலக நாடுகளே ஸ்தம்பித்து போனது. பல்வேரு கட்ட முன்னேச்சரிக்கை நடவடிக்கையால் படிப்படியாக கொரோனா தாக்கம் குறைந்தது வந்தது.

இந்த நிலையில் இந்தியாவில் மீண்டும் ஒரு சில மாநிலங்களில் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில அமைச்சரவை செயலர் ராஜீவ் கௌபா அனைத்து மாநில தலைமை செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.

காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் கொரோனா தடுப்பு மேலாண்மை மற்றும் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான தயார் நிலை குறித்து தலைமை செயலாளர்கள் எடுத்துரைத்தனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம், பஞ்சாப், கர்நாடகா மற்றும குஜராத் ஆகி யமாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடதக்கது.

Views: - 4

0

0