கோவையில் அதிகரிக்கிறது கொரோனா..! : மூன்றாம் அலை துவக்கமா? – உஷார்..!

Author: Udayaraman
31 July 2021, 7:58 pm
TN corona -Updatenews360
Quick Share

கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால் கோவையில் கொரோனா மூன்றாம் அலை துவங்கி விட்டதோ? என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலையில் பாதிப்புகளை சந்தித்திருந்தாலும், இரண்டாம் அலையில் மற்ற எந்த மாவட்டமும் சந்திக்காத அளவுக்கு பெரிய பாதிப்புகளை சந்தித்தது.
தமிழக அளவில் கோவை மாவட்டம் கொரோனா இரண்டாம் அலை தினசரி பாதிப்பில் தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது.கடந்த சில நாட்களாக தொற்றின் தாக்கம் சற்றே ஓய்ந்திருந்தது. ஒரு நாளுக்கு 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருந்த சூழல் மாறி 200க்கும் குறைவானோர் பாதிக்கப்பட்டு வந்தனர்.இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவையில் மெல்ல மெல்ல தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதன்படி, கடந்த 26ம் தேதி கோவையில் கொரோனா தொற்றால் 164 பேர் பாதிப்புக்கு உள்ளாகினர். மேலும், 266 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

அன்றைய தினம் 4 பேர் உயிரிழந்தனர்.கடந்த 27ம் தேதி, 169 பேர் பாதிக்கப்பட்டனர். சிகிச்சை பெற்று வந்தவர்களில் 248 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 3 பேர் உயிரிழந்தனர். கடந்த 28ம் தேதி 179 பேர் பாதிக்கப்பட்டு, 4 பேர் உயிரிழந்தனர்.இதேபோல், கடந்த 29ம் தேதி 188 பேருக்கு தொற்று உறுதியானது. 198 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். மேலும், அன்றைய தினம் 3 பேர் உயிரிழந்தனர். சில நாட்களாகவே 200க்கும் குறைவான பாதிப்பு பதிவான நிலையில், நேற்று (30ம் தேதி), 230 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும், 216 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இன்றைய நிலவரப்படி, பாதிப்பு இன்னும் சற்று அதிகரித்து 246 பேருக்கு உறுதியாகியுள்ளது.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 223 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர் மேலும் இன்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.கடந்த ஒரு வார கால புள்ளிவிவரத்தின் படி, கோவையில் சற்றேதொற்றின் வீரியம் அதிகரித்திருப்பது தெளிவாகிறது. இதேபோலத்தான் இரண்டாம் அலையும் துவங்கியது என்பதால், இந்த அறிகுறி கொரோனா மூன்றாம் அலையின் துவக்கமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இதனால், மக்கள் இன்னும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முகக்கவசம் அணிதல் மற்றும் சானிடைசர் பயன்படுத்தும் வழக்கம் மக்கள் மத்தியில் வெகுவாக குறைந்துள்ளது.தொற்று பாதிப்பில் இருந்து நம்மையும் ஒவ்வொரு தனி நபரையும் காப்பாற்ற நாம் முன்னெச்சரிக்கையாக இருப்பது மிக மிக அவசியமாகியுள்ளது.

Views: - 173

0

0