கொரோனா பாதித்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்: 2 வாரங்களுக்கு பிறகு குழந்தைகளை கொஞ்சிய நெகிழ்ச்சி!!

15 June 2021, 4:33 pm
Corona Preg Lady - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஒரே பிரசவத்தல் 3 குழந்தைகள் பிறந்த நிலையில் 15 நாட்களுக்கு பிறகு குழந்தையை வாரியணைத்த தாயின் சம்பவம் கண்களை கண்ணீர் குளமாக்கியுள்ளது.

தூத்துக்குடி கோரம்பள்ளத்தை சேர்ந்த ஜஸ்டின்-வித்யா தம்பதியினருக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்தது.

கடந்த 28-ந்தேதி காய்ச்சல் அறிகுறிகளுடன் கர்ப்பிணி வித்யா (வயது 25) தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வித்யா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. மேலும் கொரோனா தொற்றால் வித்யாவுக்கு கல்லீரலில் பாதிப்பு உண்டானதும், மிக ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, 30-ந்தேதி உடனடியாக அறுவைசிகிச்சை மூலம் வித்யாவுக்கு பிரசவம் நடைபெற்றது. இதில் அவருக்கு பிறந்த மூன்று குழந்தைகளும் எடை  குறைவாக ஆரோக்கியத்தன்மையற்று இருந்தது.

இதைத்தொடர்ந்து, மூன்று குழந்தைகளையும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிசு தீவிர கவனிப்பு பிரிவில் வைத்து மூச்சுத்திணறல் மற்றும் குறைமாத தன்மைக்காண சிகிச்சை வழங்கப்பட்டது.

7 நாட்கள் தீவிர கண்காணிப்பு பிரிவில் இருந்த குழந்தைகள் நலம் பெற்றதை தொடர்ந்து, மூன்று குழந்தைகளும் 15 நாட்களுக்குப் பிறகு வித்யாவிடம் இன்று ஒப்படைக்கப்பட்டன. அப்போது, கொரோனா  தொற்றிலிருந்து மீண்ட வித்யா, தன் குழந்தைகளை வாஞ்சையோடு வாரி அணைத்துக்கொண்டார்.

Views: - 112

0

0