கோவையில் இன்று 1728 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

14 June 2021, 8:37 pm
Corona Cbe - Updatenews360
Quick Share

கோவை: கோவையில் இன்று 1728 பேருககு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலையில் தொற்று பாதிப்பு இதுவரை இல்லாத அளவில் உச்சம் பெற்று வந்ததும் தற்போது பாதிப்பு மெல்ல மெல்ல குறைய துவங்கியுள்ளது. கடந்த மூன்று நாட்களாக தினசரி தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் குறைந்துள்ளது. இன்றைய நிலவரப்படி கோவையில் ஆயிரத்து 728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று 2 ஆயிரத்து 664 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது 16 ஆயிரத்து 655 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 5 ஆயிரத்து 61 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இன்று ஒரே நாளில் 27 உயிரிழந்துள்ளனர். அதன்படி கோவையில் இதுவரை உயிரிழந்தவர்களின் 1762ஆக உயர்ந்துள்ளது.

Views: - 187

0

0