கோவையில் இன்று 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

4 November 2020, 8:48 pm
Corona checkup - updatenews360
Quick Share

கோவை: கோவையில் இன்று 220 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்தை கடந்துள்ளது.

சுகாதாரத் துறை சார்பில் இன்று வெளியிடப்பட்ட பட்டியலில் கோவை மாவட்டத்தில் ஊரகம், நகர்ப்புற பகுதிகளை சேர்ந்த 220 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44 ஆயிரத்து 209 ஆக உயர்ந்துள்ளது. தவிர கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 72, 65 வயது மூதாட்டிகள், தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த 67 வயது மூதாட்டி, 65 வயது முதியவர் ஆகிய 4 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

இதன் மூலம் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 568 ஆக உயர்ந்துள்ளது. கோவையில் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 240 பேர் குணமடைந்து இன்று வீடு திரும்பினர். கோவையில் கொரோனாவில் இருந்து இதுவரை 42 ஆயிரத்து 601 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,040 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Views: - 33

0

0