கோவையில் நள்ளிரவில் அலைக்கழிக்கப்பட்ட கொரோனா நோயாளி..!

14 August 2020, 9:32 am
Corona Patients- Updatenews360
Quick Share

கோவை : கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் நள்ளிரவில் கொரோனா நோயாளி அலைக்கழிப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை, கிருஷ்ணா நகர் சொக்க முத்து விதியை சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (வயது 56). இவருக்கு கடந்த பத்து நாட்களுக்கு முன்பு காய்ச்சல் காரணமாக அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது கொரோனா வைரஸ் இருந்தது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக கோவை இ எஸ் ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்த நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு நோய் குணமடைந்தது என்று சொல்லி மருத்துவர்கள் டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் வீட்டுக்குச் சென்ற சிறிது நேரத்திலேயே வீசிங் வந்துள்ளது இதையடுத்து அவர் மீண்டும் சிகிச்சைக்காக இ எஸ் ஐ மருத்துவமனைக்கு வந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்காமல் 4 மணி நேரத்துக்கு மேலாக நள்ளிரவில் காக்க வைத்துள்ளனர். இதற்கிடையே அவர் கோவை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றுள்ளார். அங்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் மீண்டும் இ எஸ் ஐ மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

இதுகுறித்து அவரது மகன் ரித்திஸ் கொடுத்த தகவலின் அடிப்படையில், கிருஷ்ணவேணிக்கு கொரோனோ நோய்த்தொற்று குணம் ஆகாமலே குணமடைந்து விட்டதாக சொல்லி வீட்டுக்கு அனுப்பி வைத்தாக தெரிவித்தார். அவருக்கு சர்க்கரை நோயும் உள்ளதாகவும், இதற்கிடையே வீசிங் பிரச்சனையும் இரவு ஏற்பட்டதாக கூறினார்.
சிகிச்சைக்காக பல்வேறு தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைக்கு நள்ளிரவில் சென்ற போது இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு மீண்டும் அழைத்துச்செலுங்கள் என்று கூறியதாக அவர் தெரிவித்தார். தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றபோது மருத்துவர்கள் அனுமதிக்காததால் நீண்ட நேரம் நள்ளிரவு நேரத்தில் மாநகர் முழுவதும் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கூறினார்.

பின்னர் மீண்டும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சேர்க்க காவல்துறை அனுகிய பின்னர் இன்று அதிகாலை நான்கு மணிக்கு சிகிச்சைக்காக மீண்டும் சேர்த்துள்ளனர். இது போன்ற குறைபாடுகள் உள்ளவர்கள் அலைகழிக்கப்படுவதாலே தேவையற்ற அசம்பாவிதம் ஏற்படுகிறது. எனவே இது போன்ற சம்பவங்களால் ஒட்டுமொத்த புனிதமான மருத்துவத்துறைக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. எனவே இதுபோல சம்பவங்கள் நடைபெறாத வகையில் சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொதுமக்களின் தற்போதைய எதிர்பார்ப்பு ஆகும்.