திருவள்ளூரில் வெகுவாக குறையும் கொரோனா : முதலமைச்சர் பழனிசாமி

7 September 2020, 7:42 pm
CM Edappadi - updatenews360
Quick Share

திருவள்ளூர் : 40 சதவீதம் மக்கள் முகக்கவசம் அணியவில்லை என திருவள்ளூர் மாவட்டத்தில் ஆய்வு செய்த முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக அதிகரித்து வந்தது. கொரோனா தொற்று தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனால் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தொற்று குறைந்து வருகிறது.

இதே போல தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிரடி ஆய்வு நடத்தி கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு வழங்கி வருகிறார்.

அந்த வகையில் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். பின்னர் மாவட்டத்தில் உள்ள புதிய திட்டபணிகளை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதன் பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடத்திய அவர், திருவள்ளூர் மாவட்டத்தில் 40 சதவீத மக்கள் மாஸ்க் அணியாமல் சென்றதை தான் வரும் வழியில் பார்த்தாக கூறினார்.

மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வருவதாக தெரிவித்த அவர், குடிமராமத்து பணிகளை செயல்படுத்தி வருவதாகவும் கூறினார்.

Views: - 7

0

0