சாலையோரமாக வீசி செல்லப்பட்ட கொரோனா பாதுகாப்பு கவச உடை:பொதுமக்கள் அச்சம்…..

18 August 2020, 7:40 pm
Quick Share

திருப்பூர்: பல்லடத்தில் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரமாக வீசி செல்லப்பட்ட கொரோனா பாதுகாப்பு கவச உடையால் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.இதனை தடுக்கும் விதமாக திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும்,மாநகராட்சி சார்பிலும் பல்வேறு தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரத்துறை ஊழியர்கள், மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு கொரோனா பாதுகாப்பு கவச உடை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அண்ணா நகர் அருகே கொரோனா பாதுகாப்பு கவச உடை சாலையோரமாக வீசி செல்லப்பட்டுள்ளது பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஒருவருக்கு வழங்கப்படும் இந்த கவச உடை ஏன் சாலையோரமாக வீசி செல்லப்பட்டது என பொதுமக்கள் மிகுந்த குழப்பத்தில் உள்ளனர். மேலும் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைப் பிரிவில் பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவ ஊழியர்கள் இதனை வீசி சென்றிருந்தால் இப்பகுதியில் கொரோனா பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.