சென்னை 2,500.. செங்கல்பட்டு 500, கோவை 250 : 5 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா.. இன்றைய முழு நிலவரம்!!
Author: Udayachandran RadhaKrishnan5 January 2022, 8:17 pm
சென்னை : தமிழகத்தில் இன்று கொரேனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் இன்று 4824 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 லட்சத்து 60 ஆயிரத்து 449 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 9 பேர் உயிரிழந்து உள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 814 ஆக அதிகரித்துள்ளது.
இன்று மட்டும் 674 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்து 6 ஆயிரத்து 370 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில், இன்று ஒரே நாளில்,2481 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 596 பேருக்கும், கோவை மாவட்டத்தில், 259 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் உறுதியானதால் மக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது.
0
0