கொரோனா சிறப்பு நிவாரண நிதி வழங்கும் திட்டம் : அமைச்சர் கேஎன் நேரு துவக்கி வைத்தார்!!

By: Udayachandran
15 May 2021, 12:40 pm
Minister KN Nehru - Updatenews360
Quick Share

திருச்சி : கொரோனா சிறப்பு நிவாரண நிதியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு தல் தவணையாக ரூ.2 ஆயிர வழங்கும் திட்டத்தை அமைச்சர் கேஎன் நேரு துவக்கி வைத்தார்.

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரண நிதி முதல் தவணை 2000 ரூபாய் வழங்கும் நிகழ்வு தமிழகம் முழுவதும் தொடங்கியது.

அதன் ஒரு பகுதியாக திருச்சி ஆழ்வார்தோப்பு பகுதியில் உள்ள நியாய விலை கடையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பயனாளிகளுக்கு கொடுத்து தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் உள்ள 1226 நியாயவிலை கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 8 லட்சத்து 7 ஆயிரத்து 165 குடும்ப அட்டைதாரர்களுக்கு மொத்தம் 161.43 கோடி மதிப்புள்ள நிவாரண உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 2000 ரூபாய் முதல் தவணை வழங்கப்படும்.
மேலும் விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணம் கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றார்.

Views: - 120

0

0