மதுரையில் 12 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் : 45 வயது மேற்பட்டவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி!!

5 June 2021, 1:14 pm
Madurai Covaxin- Updatenews360
Quick Share

மதுரை : 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 12 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

மதுரையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட நிலையில் தடுப்பூசி தட்டுப்பாட்டால் கடந்த 5 நாட்களுக்கு மேல் தடுப்பூசி செலுத்த வரும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முடியவில்லை.

இந்நிலையில் கோவாக்சீன் தடுப்பூசி மதுரைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதன் அடிப்படையில் இன்று மதுரையில் முனிச்சாலை, அன்சாரி நகர், திடீர் நகர், கே.கே.நகர், கே.புதூர், உத்தங்குடி உள்ளிட்ட 12 இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

45 வயதுக்கு மேல் உள்ள தடுப்பூசி செலுத்தி கொள்பவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஒவ்வொரு இடங்களிலும் காவல் ஆய்வாளர் தலைமையில் பாதுகாப்பு பணிகள் மேற்க்கொள்ளப்பட்டது

Views: - 300

0

0