திருப்பூரில் கொரோனா தடுப்பூசி திருவிழா: மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு..!!

14 April 2021, 4:29 pm
tirupur vaccine - updatenews360
Quick Share

திருப்பூர்: கொரோனா தடுப்பூசி திருவிழா திருப்பூரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர்.

திருப்பூர் மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி திருவிழா மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், நடமாடும் மருத்துவ குழு மற்றும் சுகாதார மையங்கள், மினி கிளினிக்களில் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்த முகாமினை நேரில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் டாக்டர்.விஜயகார்த்திகேயன் தெரிவிக்கையில், தற்போது நாளொன்றுக்கு 5000 நபர்களுக்கு ஒரு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது, மேலும் வரும் காலங்களில் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னதாக முன் களப்பணியாளர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர், அரசு அலுவலர்கள், ஆகியோருக்கு தடுப்பூசி செலுத்தியதையடுத்து தற்போது 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் பொது மக்கள் யாரும் வதந்திகளை நம்பாமல், அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர்.விஜயகார்த்திகேயன் அவர்கள் கேட்டுக்கொண்டார். மேலும் தடுப்பூசி செலுத்த வந்த நபர்களிடம் அவர்களது உடல்நிலை குறித்து விசாரித்து இரண்டாவது தடுப்பூசியும் மறக்காமல் போட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இந்த நிகழ்வில் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் சிவகுமார் மாவட்ட சுகாதாரப் பணி இணை இயக்குனர் டாக்டர் ஜெகதீஷ் குமார், சுகாதாரத் துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

Views: - 34

0

0