கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை : அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நிதியுதவி

26 March 2020, 9:14 pm
ADMK updatenews360
Quick Share

சென்னை : கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அ.தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் நிதியுதவி வழங்கப்படும் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இதுவரை 4,,794 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 22,000 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 700 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவை பொறுத்தவரையில் 13 பேர் உயிரிழந்த நிலையில், 649 பேர் பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 26 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் கோவை மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேற்கொண்டு இந்த வைரஸ் பரவாமல் இருக்க மத்திய அரசு அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவை முழு அளவில் கடைபிடிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் அமல்படுத்தி வருகின்றனர்.

இதனிடையே, தனது எம்.பி. தொகுதியில் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.3 கோடியை வழங்குவதாக பா.ம.க. இளைஞர் அணி செயலாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் அறிவித்தார். அவரை தொடர்ந்து அதி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத் குமாரும் ரூ.1 கோடி வழங்குவதாகக் கூறினார்.

இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அ.தி.மு.க. எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடியும், எம்.எல்.ஏ.க்கள் நிதியிலிருந்து ரூ.25 லட்சமும் வழங்கப்படுவதாக அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

Leave a Reply