மறுசுழற்சி செய்யும் முகக்கவசம் பொதுமக்களுக்கு வழங்க திட்டம்; விஜயபாஸ்கர் நடவடிக்கை..!

8 August 2020, 5:49 pm
Quick Share

பொதுமக்களுக்கு மறுசுழற்சி செய்யும் முகக்கவசம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கான கேடயமாக முகக்கவசம், கையுறை உள்ளிட்ட உபகரணங்கள் முக்கியமாக உள்ளது. இதனால், நாடு முழுவதும் முக கவசங்களின் தேவை இன்றியமையாததாக மாறிவிட்டது.

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், என்-95 போன்ற முக கவசங்களை ஒருமுறை அணிந்துவிட்டு, சிகிச்சை அளித்த பிறகு அப்புறப்படுத்துகின்றனர். இருப்பினும் அவர்களையும் கொரோனா தொற்று விட்டு வைக்கவில்லை.

இந்த சூழலில் முக கவசங்களை பொதுமக்கள் விலை கொடுத்து வாங்கி ஒரு முறை பயன்படுத்தி விட்டு வீனாக்கும் நிலையும் தொடர்கிறது. இதனால், அன்றாட தேவைகளில் ஒன்றாக மாறிவிட்ட முக கவசங்கள் இலவசமாகவும், மறு சுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தும் வகையிலும் அமைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.

இதன் அடிப்படையில் தற்போது, மறுசுழற்சி செய்யும் முகக்கவசம் பொதுமக்களுக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து இன்று திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பொதுமக்களுக்கு மறுசுழற்சி செய்து மீண்டும் பயன்படுத்தும் வகையில் முகக்கவசம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

Views: - 6

0

0