சென்னையை புறம்தள்ளும் மற்ற மாவட்டங்கள்.! இன்றைய மாவட்ட நிலவரம்.!!

9 August 2020, 6:33 pm
Cbe Corona - Updatenews360
Quick Share

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் இன்று ஒரே நாளில் 5994 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.

தமிழக சுகாதாரத்துறையின் அறிக்கையின்படி தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5994 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதன் மூலம் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 96 ஆயிரத்து 901 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் மட்டும் இன்று 989 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இதன் மூலம் சென்னையில் இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 9 ஆயிரத்து 117 ஆக உள்ளது. சென்னை நீங்கலாக மற்ற மவாட்டங்களில் இன்று பாதிப்பு அதிகமாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 119 பேர் பலியாகியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 4,927 ஆக அதிகரித்துள்ளது. அதே போல இன்று ஒரே நாளில் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 6 ஆயிரத்து 20 பேர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.

திருவள்ளூரில் இன்று 396 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 397 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் 393 பேருக்கும் , மதுரையில் 107 பேருக்கும் , கோவையில் 217 பேருக்கும், கடலூரில் 146 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தேனியில் 360, திருவண்ணாமலையில் 222, தஞ்சையில் 155, திருப்பத்தூரில் 58 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

தூத்துக்குடியில் 251 பேருக்கும், கன்னியாகுமரியில் மேலும் 127 பேருக்கும், கள்ளக்குறிச்சியில் 86 பேருக்கும், திண்டுக்கல்லில் 131 பேருக்கும், ஈரோடு மாவட்டத்தில் 66 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 60 பேருக்கும், நாகையில் 69 பேருக்கும், கரூர் மாவட்டத்தில் 32 பேருக்கும், நாமக்கல் மாவட்டத்தில் 35 பேருக்கும் நீலகிரியில் 10 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.