ஊழல் தண்டனையில் இருந்து காப்பாற்ற முடியாது.. இபிஎஸ் போட்ட போடு : துரைமுருகன் ஆவேசம்!
Author: Udayachandran RadhaKrishnan26 May 2025, 6:13 pm
வேலூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்தும் நடைபெற்று வரும் பணிகள் குறித்தும் அமைச்சர் துரைமுருகன் மாநகராட்சி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையும் படியுங்க: பிரச்சனை வந்தால் வெள்ளைக் கொடி ஏந்தி பிரதமரிடம் மண்டியிடுவதே அவருக்கு வேலை.. விளாசும் நடிகை!
பின்னர் செய்தியாளருக்கு பேட்டி அளித்த அமைச்சர் துரைமுருகன், முல்லை பெரியார் அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் 7 மரங்களை வெட்டவேண்டும் பேபி டேம் கட்டவேண்டும் வேறு எதிலும் தலையிடக் கூடாது. வரும் ஜூன் மாதம் மேட்டூர் அணை திட்டமிட்டப்படி திறக்கப்படும்
தமிழக முதல்வர் தமிழ்நாட்டிற்கான நிதியை வாங்க செல்லவில்லை குடும்ப நிதியை வாங்க சென்று இருக்கிறார், கூடிய விரைவில் ஊழலுக்கான தண்டனையை திமுக விரைவில் பெறும் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளாரே என கேட்டதுக்கு, எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தவர். இப்படி பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை.
ஊழல் செய்ததற்கான தண்டனையிலிருந்து காப்பாற்ற முடியாது என்று பேசியுள்ளாரே, ஆமாம் ஆமாம் கொடநாடு வரை எங்க கையில்தான் இருக்கிறது என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.