“அவளும் நம்ம வீட்டு பொண்ணுதானே“ : கர்ப்பிணி பசுவுக்கு வளைகாப்பு நடத்திய தம்பதி!!

2 December 2020, 11:12 am
Cow Baby Showering- Updatenews360
Quick Share

செங்கல்பட்டு : கர்ப்பிணி பசுவிற்கு வளைகாப்பு விழா நடத்தி தம்பதியின்ரின் செயல் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவுகிறது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்துள்ளது பிள்ளையார் ஓடை கிராமம். இங்கு வசித்துவரும் ரமேஷ், விமலா தம்பதியினர் வீட்டில் பசு ஒன்றை வளர்த்து வருகின்றனர். இந்தப் பசு தற்போது கருவுற்று உள்ளது.

பொதுவாக வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணி தங்கள் வீட்டு பிள்ளைகளை போல வளர்ப்பது தமிழர்களின் பண்பாடு. இந்த நிலையில கர்ப்பிணி பெண்களுக்கு இல்லங்களில் நடத்தப்படும் வளைகாப்பு விழா போலவே, தங்கள் பசுவுக்கும் வளைகாப்பு விழா நடத்த தம்பதியினர் முடிவு செய்தனர்.

இதனையடுத்து, புரோகிதர்களை வைத்து பசுவிற்கு சீர்வரிசை செய்து, பட்டுப் புடவை அணிவித்து, மஞ்சள், குங்குமம், சந்தனம் வைத்து, புரோகிதர்களால் திருமாங்கல்யமும் அணிவிக்கப்பட்டது.

கருவுற்ற பசுவிற்கு வளைகாப்பு விழாவிற்கு அக்கிராமத்தில் வசிக்கும் பெண்களையும் அழைத்து, சம்பிரதாயப்படி பசுவிற்கு நலங்கு வைக்கும் வைபவமும் நடைபெற்றது.

கோமாதாவிற்கு வளைகாப்பு விழா நடத்தியதன் மூலம், தங்கள் கிராமம் நோய் நொடி இன்றி ஆரோக்கியமான கிராமமாக இருக்கும் என தம்பதியினரும், கிராம மக்களும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Views: - 0

0

0