கொரோனாவை வென்ற 90 வயதைக் கடந்த தம்பதி…!!

By: Aarthi
16 October 2020, 4:29 pm
oldy couple - updatenews360
Quick Share

சென்னையில் 90 வயதைக் கடந்த தம்பதியினர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

சென்னையில் 100 வயதான வைத்தியநாதனும், 92 வயதான அவரது மனைவியும் உள்நோயாளிகளாக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், இருவருக்கும் ஈசிஜி மற்றும் சி.டி.ஸ்கேன் எடுக்கப்பட்ட நிலையில் இருவருக்கும் கொரோனாவால் நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து, அவர்கள் இருவருக்கும் ஆக்சிஜன் செலுத்தப்பட்டு,ரெம்டெசிவிர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. 12 நாட்கள் தொடர் சிகிச்சை முடிந்து 90 வயதை கடந்த கணவன் மனைவி இருவரும் கொரோனாவில் இருந்து பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.

Views: - 37

0

0