கைக்குழந்தையுடன் ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற தம்பதி : கந்து வட்டி கொடுமையால் நடந்த அவலம்!!
Author: Udayachandran RadhaKrishnan5 November 2021, 3:12 pm
விழுப்புரம் : ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் கந்து வட்டி கொடுமையால் கனவன் மனைவி குழந்தையுடன் தற்கொலை முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் வண்டி மேடு பகுதியை சேர்ந்தவர் முகமது அலி ஜின்னா. இவர் விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே ஹைடெக் என்ற பெயரில் இரத்த பரிசோதனை நிலையம் ஒன்றை நடத்தி வந்தார்.
இந்நிலையில் தொழிலில் முதலீடு செய்வதற்காக அதே வண்டிமேடு பகுதியை சேர்ந்த சன் குரூப் மற்றும் பாலாஜி இருவரிடமும் கடந்த ஐந்து ஆண்டுக்கு முன்பு 6 லட்சம் ரூபாய் வட்டிக்கு பணம் வாங்கி உளளார்.
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக தொழிலை தொடர்ந்து நடத்த முடியாத நிலையில் முகமது அலி ஜின்னா பாதிக்கப்பட்டுள்ளார். மேலும் வாங்கிய கடனுக்காக கடந்த 5 ஆண்டுகளாக வட்டியும் மேலும் அசலையும் கொடுத்து வந்த நிலையில் தற்போது வட்டியுடன் சேர்த்து 15 லட்சம் ரூபாய் தரவேண்டும் என சந்துரு மற்றும் அவருடைய சகோதரர் காவல்துறையில் பணியாற்றி வரும் பாலாஜி இருவரும் தனக்கு மிரட்டல் விடுப்பதாகவும், நேற்று வீட்டிற்கு இருவரும் வந்து மனைவி மற்றும் தாய் இருவருக்கும் கொலை மிரட்டுவதாகவும் கூறி இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் மனைவி மற்றும் குழந்தைதுடன் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
அங்கு பணியில் காவலர்கள் தடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். கந்துவட்டி கொடுமையால் இளைஞர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
0
0