செந்தில்பாலாஜி கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு : 21வது முறையாக காவல் நீட்டிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
16 February 2024, 4:17 pm

செந்தில்பாலாஜி கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு : 21வது முறையாக காவல் நீட்டிப்பு!!

கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். கடந்து 8 மாதங்களாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜி சமீபத்தில் தனது அமைச்சர் பதவி ராஜினாமா செய்தார். இவரின் ராஜினாமா கடிதத்திற்கு ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளித்தார்.

இதற்கிடையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் (பிப்ரவரி-15) முடிவடைந்த நிலையில் இன்று (பிப்ரவரி.16) வரை நீட்டித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். இதன் மூலம் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவல் 20-வது முறையாக நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் (பிப்ரவரி16) முடிவடைந்த நிலையில் பிப்ரவரி 20-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்தார்.

இதனால் செந்தில் பாலாஜி 21-முறையாக காவல் நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு முதன்மை நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க அமலாக்கத்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர். செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கு விசாரணையை பிப்ரவரி 19-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • wine party right after the wedding... Netizens shower Priyanka திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!