சிறுமைக்கு பாலியல் தொல்லை தாயையும் சேர்த்து சிறையில் அடைக்க நீதிமன்றம் தீர்ப்பு..!

16 October 2020, 8:00 pm
cbe Court Close - Updatenews360
Quick Share

கோவை: கோவையில் சிறுமி ஒருவரை தந்தையே பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில் தாயையும் சேர்த்து சிறையிலடைக்க கோவை போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவை மாவட்டம் ஆனைமலை சேர்ந்த 12 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அவரது தந்தை மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.இதுதொடர்பான விசாரணை கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.


இந்த வழக்கில் இன்று நீதிபதி ராதிகா தீர்ப்பு வழங்கினார் அப்போது பாலியல் துன்புறுத்தல் செய்த தந்தை மற்றும் பாலியல் துன்புறுத்தலை தடுக்காத தாய் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டார். மேலும், இருவருக்கும் தலா ரூ.1000 அபராதம் மற்றும் அரசு சார்பில் சிறுமிக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி ராதிகா உத்தரவிட்டுள்ளார்.

Views: - 39

0

0