புதுச்சேரி மதுபானங்களுக்கான கோவிட் வரி : மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!!

24 August 2020, 10:27 am
Pondy Liquor- Updatenews360
Quick Share

புதுச்சோி : மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட கோவிட் வாி மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் 25ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, புதுச்சேரியில் மூடப்பட்ட மதுக்கடைகளிலிருந்து கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் 89 மதுக்கடைகள், 10 சாராயக்கடைகள், 3 கள்ளுக்கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. மேலும், கலால்துறை துணை ஆணையர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பின்னர், ஊரடங்கு தளர்த்தப்பட்டதை தொடர்ந்து, மே 25ம் தேதி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

புதுச்சேரியில் 920 மது வகைகள் உள்ளன. தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 154 பிராண்டுகள் ஒரே மாதிரியாக உள்ளன. இந்த 154 பிராண்டுகளுக்கு தமிழகத்துக்கு நிகராக புதுச்சேரியிலும் வரி விதிக்கப்பட்டது. மற்ற பிராண்டுகளுக்கு அடக்க விலையிலிருந்து 25 சதவீதம் கோவிட் வரி போடப்பட்டது. மேலும், கள் மற்றும் சாராயத்திற்கு 20 சதவீதம் கோவிட் வரி விதிக்கப்பட்டது. இதனால் மது விற்பனை கடும் சரிவை சந்தித்தது. இந்நிலையில் மதுபானங்களுக்கு 3 மாதம் விதிக்கப்பட்டிருந்த காலக்கெடு வரும் 25ம் தேதியுடன் முடிகிறது.

இதையடுத்து, மதுபானங்கள் மீதான கோவிட் வரி விதிப்பு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பது தொடர்பாக கோப்பு தயாரிக்கப்பட்டு, முதல்வர் நாராயணசாமி வழியாக கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதற்கு கவா்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.

இதுதொடா்பாக புதுச்சேரி கலால்துறை ஆணையர் சஷ்வத் சவுரவ் வெளியிட்டுள்ள கூறியிருப்பதாவது: புதுச்சேரி கலால் சட்டம் 1970 பிரிவு 70ஏ-ல் குறிப்பிட்டுள்ள படி புதுச்சேரியில் விற்கப்படும் மதுபானங்களுக்கான சிறப்பு கலால் வரி வசூலிப்பது நவம்பா் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Views: - 44

0

0