தாழ்வாக தொங்கிய மின்கம்பி…மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு ‘ஷாக்’ அடித்து உயிரிழந்த பரிதாபம்: பொதுமக்கள் சாலைமறியல்..!!

Author: Rajesh
19 March 2022, 9:49 am
Quick Share

மயிலாடுதுறை அருகே தாழ்வாக தொங்கிய மினகம்பியில் சிக்கி பசுமாடு உயிரிழந்ததால் மின்சார வாரிய அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை அருகே கடுவங்குடி மெயின் ரோட்டை சேர்ந்தவர் விவசாயி வடிவேல்(65). இவரது பசுமாடு மதியம் அப்பகுதியில் உள்ள வயலில் மேய்ச்சலுக்கு சென்றபோது மிகத்தாழ்வாக தொங்கிய மினகம்பியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து பசுமாடு சம்பவ இடத்தில் இறந்தது.

இதனால் அந்த பகுதியில் மின் வினியோகத்தை நிறுத்தியவர்கள் சம்பவ இடத்திற்கு வரவில்லை. இரவு எட்டு மணி வரை மின்வாரிய ஊழியர்கள் வந்து சரி செய்து மின் சப்ளை கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மின்வாரிய ஊழியர்களை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வயல்வெளிகளில் தாழ்வாக தொங்கும் மின்கம்பிகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்காத மின்வாரிய அதிகாரிகளை கண்டித்தும் பசுமாடு உயிரிழப்பிற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி மயிலாடுதுறை – மணல்மேடு வழித்தடத்தில் கடுவங்குடி மெயின் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை அடுத்து மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பியை சரி செய்து மின் வினியோகம் செய்யும் பணியை தொடங்கினர் இதனால் அப்பகுதியில் அரைமணிநேரத்திற்குமேல் போக்குவரத்து பாதிப்படைந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Views: - 698

0

0