தீபாவளியை முன்னிட்டு களைகட்டிய மாட்டுச்சந்தை ; ரூ.3 கோடிக்கு கால்நடைகள் விற்பனை…!!

Author: Babu Lakshmanan
8 November 2023, 12:49 pm

தீபாவளி பண்டிகை முன்னிட்டு களைகட்டிய மாட்டுச்சந்தை மூன்று கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் நடைபெற்றது.

புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் உள்ள வாரச்சந்தையில் புதன்கிழமை தோறும் மாட்டுச் சந்தை நடைபெறுவது வழக்கம். அதிகாலை 4 மணி முதல் நடைபெறும் மாட்டுச் சந்தையில் புதுக்கோட்டை சுற்றியுள்ள ஆதனக்கோட்டை, கரம்பக்குடி, ஆலங்குடி, அறந்தாங்கி, பொன்னமராவதி, கீரனூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான மாடுகள் இந்த விற்பனைக்கு வந்தன.

அதிகாலை 4 மணி முதல் நடைபெற்ற இந்த வர்த்தகத்தில் 3 கோடி ரூபாய் அளவிற்கு மாடுகள் விற்பனையாகின. மேலும், வாரந்தோறும் புதன்கிழமை நடைபெறும். மேலும், அதிகாலை 4 மணி முதல் விற்பனை செய்தனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதன்கிழமை இன்று நடைபெற்ற மாட்டுச்சந்தையில் 300க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனை கொண்டுவரப்பட்டது. தீபாவளி பண்டிகை நெருங்கி வருகின்ற நேரத்தில் விவசாயிகளிடம் போதுமான அளவு வருமானம் இல்லாததால் தங்கள் கால்நடைகளை சந்தையில் விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும், இன்று நடைபெற்ற வார சந்தையில் சுமார் 200க்கும் மேற்பட்ட மாடுகள் அடிமாடுகளாக விற்பனை செய்யப்பட்டு கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அதிகாலை நடைபெறும் இந்த வாரச்சந்தையில் உயர்மின் கோபுரம் அமைத்து தர வேண்டும் என வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதே சமயம், இன்று விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட பசுமாடுகள் குறைந்தபட்சம் 15 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையும், காளை மாடுகள் 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரையும் விற்பனையாகின. புதுக்கோட்டையில் புதன்கிழமை தோறும் நடைபெறும் மாட்டுச் சந்தையும் வெள்ளிக்கிழமை தோறும் நடைபெறும் ஆண்டு சந்தைக்கும், ஒரே இடத்தில் நடைபெற்று வருவதால் அந்த பகுதியில் அடிப்படை வசதிகளும் உயர்மின் விளக்கு கோபுரங்களும் அமைத்து தர வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • rashmika mandanna first horror movie thama is vampire movie இரத்தக்காட்டேரியாக மாறும் கியூட் நடிகை? ராஷ்மிகா மந்தனாவின் புதிய ஹாரர் படத்தின் கதை இதுதானா?