அரிவாள் வெட்டில் முடிந்த கிரிக்கெட் போட்டி : இளைஞர் மீது வெறிச்செயல்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்!

9 July 2021, 1:58 pm
Yotuh Attack Weapons - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இளைஞர் ஒருவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் உடையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். அவரது தம்பி சூர்யா. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கிரிக்கெட் விளையாட்டில் சூர்யாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த செல்வா என்ற இளைஞருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சூர்யா கார்த்தியிடம் கூறவே கார்த்தி செல்வாவை கண்டித்துள்ளார். அப்போது செல்வாவிற்கும் கார்த்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தகாத வார்த்தைகள் பேசி சண்டையிட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று கார்த்தி அவரது நண்பர்களுடன் அப்பகுதியில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது அங்கு தனது நண்பர்களுடன் வந்த செல்வா கார்த்தியை அரிவாளால் தாக்கி விட்டு தப்பி சென்றுள்ளார்.

இதில் கார்த்திக்கு கை, கால், வயிறு ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்படவே அவரை மீட்ட அவரது நண்பர்களும் அக்கம்பக்கத்தினரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பீளமேடு காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கொண்டு தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர். தற்போது சம்பவம் நடத்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 202

0

0