அரசு விடுதியில் மாணவிக்கு நேர்ந்த அதிர்ச்சி… திமுக ஆட்சியில் குற்றவாளிகளுக்கு பயமே இல்லை : அண்ணாமலை கண்டனம்!

Author: Udayachandran RadhaKrishnan
9 June 2025, 2:20 pm

நேற்று தாம்பரம் அருகே அரசு விடுதியில் தனியா இருந்த மாணவியை மர்மநபர் பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளார்,.

அதில் இருந்து தப்பிக்க முயற்சித்த மாணவியை கீழே தள்ளி கால்களை உடைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது பற்றி மாணவி சிட்லபாக்கம் காவல்துறையினருக்கு புகார் தெரிவிக்கவே, மாணவி சொன்ன அடையாளத்தை வைத்து விடுதி காவலரை கைது செய்தனர்.

இதையும் படியுங்க: கூட்டணி ஆட்சி வந்தால் நல்லதுதான்.. தவெகவுடன் கூட்டணியா? பிரேமலதா கொடுத்த பதில்!

இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, சென்னையில், அரசு சேவை இல்லத்தில் தங்கிப் படிக்கும் 13 வயது மாணவி, விடுதி காவலாளியால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு மட்டுமல்லாமல், பெற்றோர்களிடையே அச்ச உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதுமே, பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல் வழக்குகள், திமுக அரசால் பொறுப்பின்றி கையாளப்படுவதன் விளைவு, சமூக விரோதிகளுக்கு சட்டத்தின் மீதும், காவல்துறையின் மீதும் சிறிதும் பயமில்லாமல் போய்விட்டது.

Criminals have no fear under DMK rule: Annamalai condemns

ஒவ்வொரு குற்றம் நடைபெற்ற பிறகும், குற்றவாளியைப் பிடித்து விட்டோம் என்று பெருமை பேசிக் கொண்டிருக்கும் திமுக அரசு, குற்றம் நடக்காமல் தடுப்பதுதான் அரசின் முதல் கடமை என்பதை மறந்து போய்விட்டது.

உடனடியாக, தமிழகம் முழுவதும் உள்ள மாணவியர் விடுதிகளில், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும், பெண் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!