தமிழக காவல்துறை குறித்து விமர்சனம்.. சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜரானார் பாஜக பிரமுகர் எஸ்ஜி சூர்யா!!

Author: Udayachandran RadhaKrishnan
20 July 2024, 4:29 pm

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயத்தினால் 67 பேர் உயிரிழந்த நிலையில் இவ்விவகாரத்தில் தமிழ போலீசாரும், புதுச்சேரி போலீசாரும் மேற்கொண்ட விசாரணை குறித்து தமிழ் பத்திரிக்கை நாளிதழில் வெளிவந்த செய்தியை பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூரியா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

அதே போன்று விஷ சாராய விற்பனை குறித்து தொடர்ந்து பதிவிட்டு வந்ததால் பதிவிடப்படும் செய்தியின் உண்மை நிலை அறிந்து பதிவிட்டப்பட்டிருக்கிறாரா என்பது குறித்து விசாரனை செய்ய பாஜக எஸ் ஜி சூரியாவிற்கு விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

இந்த சம்மன் நேற்றைய தினம் பெறப்பட்ட நிலையில் இன்று விழுப்புரம் சிபிசிஐடி அலுவலகத்தில் பாஜக மாநில செயலாளர் எஸ் ஜி சூரியா நேரில் ஆஜராகினார்.

ஆஜராகியதை தொடர்ந்து சிபிசிஐடி,ஏடி, எஸ்பி, எஸ்.ஜி சூரியாவிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பிறகு பேட்டியளித்த எஸ் ஜி சூரியா கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் நாளிதழில் வந்த செய்தியை பதிவிட்டதற்காக சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ளும் சிபிசிஐடி போலீசார் இவ்விவகாரத்தில் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் எதிர்கட்சி பாஜகவை சார்ந்தவர் என்பதால் தனக்கு சம்மன் அனுப்பட்டு விசாரணை செய்வதாகவும் இந்த விசாரனைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க தான் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?