தீபாவளியை முன்னிட்டு தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடு? நாளை மறுநாள் முதலமைச்சர் ஆலோசனை!!

Author: Udayachandran RadhaKrishnan
21 October 2021, 7:09 pm
CM Stalin -Updatenews360
Quick Share

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் நாளை ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவியது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்க போடப்பட்டும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதையடுத்து பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

பல்வேறு கட்டுப்பாடுகளில் மெல்ல மெல்ல தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்து வந்தது. இந்த நிலையில் நாளை மறுநாள் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிப்பது தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் நாளை மறுநாள் காலை 11.30க்கு நடைபெறும் இந்த ஆலோசனையில் தலைமை செயலாளர், மருத்துவத்துறை செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்றனர்.

Views: - 420

0

0