ஊரடங்கு காரணமாக கைவிரித்த வடமாநிலங்கள் : திருப்பூரில் காடா துணி உற்பத்தி நிறுத்தம்!!

16 April 2021, 2:42 pm
Kata Cloth -Updatenews360
Quick Share

திருப்பூர் : கொரோனா தாக்கத்தினால் வடமாநிலங்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் திருப்பூர், கோவை மாவட்டத்தில் 400 கோடி ரூபாய் மதிப்பிலான காடா துணிகள் தேக்கமடைந்துள்ளன.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஜவுளி உற்பத்தியாளர்கள் இரண்டாவது அலை கொரோனோ பாதிப்பு காரணமாக ஜவுளி உற்பத்தியை நிறுத்தம் செய்துள்ளனர். வட மாநிலங்களான மகாராஷ்டிரா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக முழு நட்டம் என அறிவித்ததால் அவர்கள் கொடுத்த ஆர்டர்களை கேன்சல் செய்துவிட்டு இனிமேல் எந்த ஜவுளிகளையும் அனுப்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.

இதனால் திருப்பூர், கோவை மாவட்டத்தில் காடா துணி உற்பத்தி பெருமளவில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. விசைத்தறிகள், ஸ்பின்னிங் மில்ஸ், OE,சைசிங், வைண்டிங் என பல்வேறு நிறுவனங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பெற்று பலனடைந்து வருகின்றனர்.

இந்த தொழிற்கூடங்களில் மூலப்பொருட்கள் கொள்முதல் செய்வதை நிறுத்தம் செய்தும், மூலப் பொருட்கள் தற்போது ஸ்டாக் உள்ள வரை மட்டுமே தொழிற் கூடங்களை இயக்க உள்ளதாகவும், பின்னர் தொழிற் கூடங்களில் உற்பத்தியை நிறுத்தம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர்.

தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உற்பத்தி நிறுத்தம் ஏற்படும் சூழலினால் தற்போது கேள்விக்குறியாக உள்ளது. நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு கோடி மீட்டர் காடா துணிகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

தற்போது வெளிமாநிலங்களில் உற்பத்தி செய்யப்பட்ட காடா துணிகள் அனுப்ப முடியாததால் தொழிற்சாலைகளில் தேக்கம் ஏற்பட்டது. அதன் காரணமாக 400 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி துணிகள் தொடர்ந்து பத்தாவது நாளாகவும் தேக்கம் அடைந்துள்ளது.

2வது கொரோனா பாதிப்பு காரணமாக குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் முழு ஊரடங்கு கடும் பாதிப்பு காரணமாக ஜவுளி உற்பத்தியாளர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்

தற்போது தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதியாகும் காடா துணிகள் அந்தந்த மாநிலங்களில் பெற்றுக் கொள்ள இயலாத நிலை ஏற்பட்டுள்ளதால் உற்பத்தியாளர்கள் தொழிலாளர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.

தொழிலாளர்கள் உள்பட ஏராளமானோர் வேலை இழந்து தவிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது என தமிழ்நாடு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் தெரிவித்தார்.

கொரோனா தாக்கத்தினால் குஜராத், மகாராஷ்டிரா, டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் ஊரடங்கு காரணமாக திருப்பூர், கோவை மாவட்டத்தில் 400 கோடி ரூபாய் மதிப்பிலான காடா துணிகள் தேக்கமடைந்துள்ளன.

திருப்பூர், சோமனூர், பல்லடம், கருமத்தம்பட்டி உட்பட பல்வேறு இடங்களில் உள்ள விசைத்தறி தொழிற் கூடங்களில் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது.

Views: - 29

0

0