தமிழகத்தில் சனி, ஞாயிறன்று ஊரடங்கா? தலைமை செயலாளர் இன்று முக்கிய ஆலோசனை!!

16 April 2021, 9:38 am
Rajiv Ranjan -Updatenews360
Quick Share

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிப்பதை கட்டுப்படுத்த தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் விதமாக பொது இடங்களில் முக கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியை கட்டாயம் பின்பற்றுவது என அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

தலைமை செயலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட் உயரதரிகாரிகள் பங்கேற்கின்றனர்.

ஏற்கனவே பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் ஊரடங்கு பிறப்பிக்க வாய்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 25

0

0