பாடத்திட்ட குறைப்பு குறித்த அறிவிப்பு 5 நாட்களில் வெளியாகும் : அமைச்சர் செங்கோட்டையன்…

28 November 2020, 2:41 pm
Minister Sengottayan - Updatenews360
Quick Share

ஈரோடு : தமிழகத்தில் பாடத்திட்டம் குறைப்பு குறித்து திங்கட்கிழமை முதல்வரிடம் அறிக்கை வழங்கப்பட உள்ளது என்றும், முதல்வரிடம் அறிக்கை தந்த 5 நாளில் பாடத்திட்டங்கள் குறித்த அறிவிப்பு வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்..

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காசிபாளையம் குருமந்தூர் கோசணம், அஞ்சானூர், ஆண்டிபாளையம் உள்ளிட்ட ஊராட்சிகளில் தனிநபர் குடிநீர் திட்டப்பணி கன்று வளர்ப்பு கடனுதவி மகளிர் சுய உதவிக்குழுகள் கடனுதவி என ரூ.6.19 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன் அரையாண்டு தேர்வு ஆன்லைன் மூலம் நடைபெறும் என்ற தகவல் தவறானது. பள்ளிகளில் பாடத்திட்டம் குறைப்பு குறித்து திங்கட்கிழமை முதல்வரிடம் அறிக்கை வழங்கப்பட உள்ளது. 5 நாட்களில் பாடத்திட்டங்கள் குறைத்து வழங்கப்படும்.

அதிமுகவின் தேர்தல் பிரச்சாரம் தேர்தல் குழுவின் வழிகாட்டுதல் படி துவங்கும். புயல் நிவாரணம் குறித்து குற்றம்சாட்டும் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த போது மழைபாதிப்புகள் அவருக்கு தெரியாமல் போய்விட்டது.

தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி வெற்றி பெறுவது மக்கள் கையில் தான் உள்ளது. தேர்தல் முடிவுக்கு பிறகு தான் தெரியும். ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெறுவது குறித்து இதுவரை முதல்வரிடம் ஆலோசனை நடத்தவில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Views: - 0

0

0