விடிய விடிய அதிமுகவுடன் கூட்டணி நடத்துவாரு… விடிந்த பின் ஆட்டுக்குட்டி கூட கூட்டணி வைப்பாரு : பாமக பற்றி சி.வி. சண்முகம் தாக்கு!

Author: Udayachandran RadhaKrishnan
25 March 2024, 9:50 pm

விடிய விடிய அதிமுகவுடன் கூட்டணி நடத்துவாரு… விடிந்த பின் ஆட்டுக்குட்டி கூட கூட்டணி வைப்பாரு : பாமக பற்றி சி.வி. சண்முகம் தாக்கு!

விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கரும்பு விவசாயிகள் மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் எம்.பி., தலைமை தாங்கி, வேட்பாளர் பாக்யராஜை அறிமுகம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார்.

அதில் அவர் கூறியதாவது, ஸ்டாலின், மோடி எதிரிபோல் மக்களிடம் நாடகமாடி வருகின்றனர். இவர்கள் இருவருமே மக்களை ஏமாற்றி வஞ்சிக்கின்றனர். தற்போது நாட்டிற்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. பிரதமர் மோடி நாட்டுக்கு ராஜாவாக இருந்தாலும் தமிழகத்திற்கு பூஜா தான் எனவும் கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றிருக்க வேண்டும். பா.ஜ.,வோடு இணைந்ததால் சிறுபான்மை ஓட்டுகளை இழந்தது போல பா.ம.க.வோடு இணைந்ததால் தோல்வி ஏற்பட்டது. தேர்தலுக்கு தேர்தல் அணி மாறும் பா.ம.க., கடை விரித்து கட்சியை ஏலம் விடுகின்றனர்.

நெய்வேலி என்.எல்.சி., க்காக போராட்டம் நடத்திய அன்புமணி, அங்கு 3-வது சுரங்கத்தை மூட மோடி ஆதரவோடு நடவடிக்கை எடுப்பாரா என தெரியவில்லை. குறைந்தபட்சம் இந்த தேர்தலில் வாக்குறுதியாவது தருவாரா. பா.ம.க., அவர்கள் சார்ந்துள்ள சமூக மக்களை ஏமாற்ற வேண்டாம். நம்பிக்கை துரோகிகளுக்கு நாம் யார் என இந்த தேர்தலில் காட்ட வேண்டும்.

அமைச்சர்கள் கூட ரப்பர் ஸ்டாம்ப்களாகவே உள்ளனர். இந்த ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சீரழிந்துள்ளது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை மோடி நடைபயணமாக சென்றாலும் தமிழகத்தில் காலூன முடியாது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?