கொஞ்சம் கூட வெட்கம் மானம் சூடு சொரணை இல்லை… அப்பானு சொல்லுவாங்களா? சி.வி. சண்முகம் காட்டம்!

Author: Udayachandran RadhaKrishnan
17 May 2025, 5:00 pm

கொஞ்சம் கூட வெட்கம் மானம் சூடு சொரணை இல்லை, அப்பா என்று தமிழக முதல்வரை அழைப்பது குறித்து காட்டமாக பேசினார் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே சேத்தியாதோப்பு ராஜீவ் காந்தி சிலை அருகில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் புவனகிரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அருண்மொழிதேவன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 25 மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனம் வழங்கப்பட்டது.

இதையும் படியுங்க: ED ரெய்டு பயத்தால் பழிவாங்கும் ஸ்டாலின்.. அதிமுகவை அசைக்க கூட முடியாது : இபிஎஸ் கடும் விமர்சனம்!

எம்எல்ஏ அருள்மொழி தேவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் பங்கேற்று பயனாளிகளுக்கு இலவசமாக வாகனத்தை வழங்கினார்.

பின்னர் பேசிய சிவி சண்முகம் தமிழக முதல்வரை அப்பா என்று கொஞ்சம் கூட வெட்கம் மானம் சூடு சொரணை இருந்தால் அப்பா என்று சொல்ல முடியுமா பிறந்த குழந்தையை கூட அம்மா என்று சொல்லலாம் ஆனால் அப்பா என்று எப்படி சொல்ல முடியும் என காட்டமாக பேசினார்.

CV Shanmugam is a disgrace About CM Stalin

தொடர்ந்து பேசிய அவர் இந்த ஆட்சியில் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம் என்று சொல்கிறார்களே அதிமுக ஆட்சி அமைந்திருந்தால் 1500 ரூபாய் கொடுத்திருப்போமே அதேபோல் 6 சிலிண்டர் கிடைத்திருக்குமே மக்களாகிய நீங்கள் தவற விட்டு விட்டீர்கள்.

1500 பணத்தையும் ஆறு சிலிண்டரையும் மேலும் தாலிக்கு தங்கம் உள்ளிட்ட எல்லாவற்றையும் இழந்து விட்டீர்கள் என பேசினார் மீண்டும் அம்மா வழியில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என அவர் பேசினார்.

  • tiruppur subramaniam shared the discussion to rb choudary about vijay movie விஜய்யை வைத்து தயவுசெய்து படம் எடுக்காதீங்க- தயாரிப்பாளரின் காதில் ஓதிய பிரபலம்! இதான் காரணமா?
  • Leave a Reply